பதிவு செய்த நாள்
03 செப்2021
19:31

சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து, ‘சிப்காட்’ தொழில் பூங்காக்களின் எல்லைகளிலும் பனை மரங்களை வளர்ப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 24 தொழில் பூங்காக்கள் மற்றும் ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன.இவற்றில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமைச் சூழலை பேணவும், சிப்காட் நிறுவனம் சார்பில், தொழில் பூங்காக்களில் உள்ள திறந்தவெளி பொது ஒதுக்கீட்டு பகுதியில் இதுவரை 2.65 லட்சம் வளர்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டுஉள்ளன.
மேலும் மூன்று லட்சம் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த நிலையில், சிப்காட் பூங்காக்களின் எல்லைகளில் பனை மரங்களை வளர்க்கவும் தொழில் துறை திட்டமிட்டுள்ளது.முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், ஓசூர் குருபரப்பள்ளி தொழில் பூங்காக்களில், ஒரு லட்சம் பனை மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 50 ஆயிரம் பனங் கொட்டைகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15 லட்சம் பனை மரங்களை வளர்க்க திட்டமிடப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|