பதிவு செய்த நாள்
04 செப்2021
20:12

புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், நாட்டிலுள்ள தென் மாநிலங்களில் 70 புதிய ஷோரூம்களை துவங்கி உள்ளது.
இந்நிறுவனம், சில்லரை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த ஷோரூம்களை துவங்கி உள்ளது. வளரும் சந்தை வாய்ப்பு கொண்ட 53 நகரங்களில், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த புதிய ஷோரூம்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஷோரூம்கள் பயணியர் வாகனம் மற்றும் மின்சார வாகன விற்பனைக்கானதாகும் என, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.இந்த புதிய ஷோரூம்களுடன் சேர்த்து, தென் மாநிலங்களில் நிறுவனத்தின் ஷோரூம் எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில், 980 ஆக அதிகரித்து உள்ளது.
நாட்டின் மொத்த வாகன விற்பனையில், தென் மாநிலங்களின் சந்தை பங்களிப்பு 28 சதவீதமாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, அதன் மொத்த விற்பனையில் 12.1 சதவீதமாகும்.பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்திலும் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டிலும் விற்பனை அதிகரித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|