பதிவு செய்த நாள்
07 செப்2021
19:44

புதுடில்லி:ஐ.பி.பி.பி., எனப்படும் ‘இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க்’ அதன் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வசதி கடன் வழங்க, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கிக்கு 650 கிளைகள் மற்றும் 1 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி வசதி முனையங்கள் உள்ளன. அத்துடன், இவ்வங்கிக்கு 4.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டு வசதி கடன் பெறுவதற்காக இவ்வங்கி உதவும்.
கட்டமைப்பு
வீட்டு வசதி கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பது, கடன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் மேற்கொள்ளும். ஐ.பி.பி.பி.,க்கு 2 லட்சத்திற்கும் அதிகமான தபால் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள், கையில் ‘மைக்ரோ ஏ.டி.எம்., பயோமெட்ரிக் சாதனம்’ ஆகியவற்றுடன் கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று வங்கிச் சேவையை வழங்கி வருகின்றனர்
. ‘‘இத்தகைய வலிமையான ஊழியர் கட்டமைப்பு உள்ளதால், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வசதி கடன்களை சுலபமாக வினியோகிக்க முடியும்,’’ என, ஐ.பி.பி.பி., நிர்வாக இயக்குனர், ஜே.வெங்கட்ராமு தெரிவித்துள்ளார்.எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், மாத ஊதியதாரர்களுக்கு 6.66 சதவீத வட்டியில் 50 லட்சம் ரூபாய் வரை வீட்டு வசதி கடன் வழங்குகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|