பதிவு செய்த நாள்
07 செப்2021
19:46

புதுடில்லி:செயற்கை நுாலிழையில் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு, உற்பத்தி அடிப்படையில் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கவும், ஏற்றுமதியை அதிகரித்து சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்கவும், ‘பி.எல்.ஐ.,’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மொபைல் போன், மருத்துவ உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட 13 துறைகளுக்கு, அவற்றின் உற்பத்திக்கு ஏற்ப ஊக்கச் சலுகை வழங்கப்படுகிறது.
இந்த பட்டியலில், பாலியஸ்டர் போன்ற செயற்கை நுாலிழையில் தயாரிக்கப்படும் ஆடைகள், தொழில்நுட்ப ஜவுளிகள் ஆகியவற்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.இந்த திட்டத்திற்கு, இன்று டில்லியில் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளிக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.
இதன் வாயிலாக, சர்வதேச ஜவுளி சந்தையில், வங்கதேசம், வியட்னாம் போன்ற நாடுகளின் போட்டியை இந்தியா சமாளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|