பதிவு செய்த நாள்
10 செப்2021
21:17

புதுடில்லி:வேளாண் துறை ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கும் சரக்கு போக்குவரத்து கட்டணச் சலுகை, பால் பண்ணைப் பொருட்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வேளாண் துறை ஏற்று மதியாளர்களின் சரக்கு போக்குவரத்து செலவை குறைக்க, டி.எம்.ஏ., என்ற ஊக்கச் சலுகை திட்டம், 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, வட அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தால், கடல் வழி சரக்கு போக்குவரத்து செலவில், 50 சதவீதம்; விமானம் வாயிலான சரக்கு போக்குவரத்து செலவில், 100 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கிறது.
மேலும், வேளாண் பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், டி.எம்.ஏ., திட்டத்தில் பால் பண்ணைப் பொருட்களையும் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், பால் பண்ணைப் பொருட்களை ஏற்றுமதி செய்வோரின் சரக்கு போக்குவரத்து செலவு பெருமளவு குறையும். இந்த திட்டம், 2022 மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனிடையே, ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய வரி நிலுவையில், 56 ஆயிரத்து 27 கோடி ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதை, ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|