வேளாண் ஏற்றுமதி சலுகையில் பால் பண்ணை பொருள் சேர்ப்பு வேளாண் ஏற்றுமதி சலுகையில் பால் பண்ணை பொருள் சேர்ப்பு ...  கூகுள் – ஜியோ ஸ்மார்ட் போன் வெளியீடு தள்ளிவைப்பு கூகுள் – ஜியோ ஸ்மார்ட் போன் வெளியீடு தள்ளிவைப்பு ...
புதிய எரிபொருள் துறையில் இந்தியா அமெரிக்கா கூட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2021
21:20

புதுடில்லி:புதிய எரிபொருள்களின் ஆய்வு, கண்டுபிடிப்பு, தயாரிப்பு ஆகிய வற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு செய்து உள்ளன.

டில்லியில், அமெரிக்க – இந்திய துாய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது.‘வீடியோ கான்பரன்ஸ்’இதில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிரான்ஹோம் ஆகியோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர்.

இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்க–இந்திய துாய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கீழ், மின்சாரம் மற்றும்எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஸ்திரமான வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்து, இத்திட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத துாய்மையான எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா – அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஐந்து அம்சங்கள்இதன் வாயிலாக, காற்று மாசற்ற, துாய்மையான புதிய எரிபொருள்களின் கண்டுபிடிப்பு, ஆய்வு, தயாரிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் பயன்பெறும்.

இந்த ஐந்து அம்சங்கள் அடிப்படையில், உயிரிஎரிபொருள்கள் துறை பணிகளை கண்காணிக்க, கூட்டு செயல் திட்டக் குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அத்துடன், இந்திய –அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தியா, 2030ல் 450 கிகாவாட் புதுப்பிக்க எரிசக்தி உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்து, தீவிரமாக பணியாற்றி வருவதற்கு, ஜெனிபர் கிரான்ஹோம் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 10,2021
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)