பதிவு செய்த நாள்
10 செப்2021
21:27

பெங்களுரு:இணையம் வாயிலாக கல்வி போதிக்கும், ‘பைஜூஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஆசிரியர் பைஜூ ரவீந்திரன் என்பவரால் உருவாக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனம், குறுகிய காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு, ‘ஆன்லைன்’ கல்வி முறை அறிமுகமாகியுள்ளது. இது, பைஜூஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக அமைந்துள்ளது.
இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பைஜூஸ் நிறுவனம், தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களிடம் நிதி திரட்டுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறது. இதன் வாயிலாக, 2,600 கோடி – 4,300 கோடி ரூபாய் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பைஜூஸ் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் துவக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 1 லட்சத்து 50 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|