பதிவு செய்த நாள்
10 செப்2021
21:47

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்திய நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை, 26 சதவீதம் உயர்ந்து, 1.55 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, ‘ருபிக்ஸ் டேட்டா சயின்சஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2020 – 21ம் நிதியாண்டில், புதிதாக ஒரு லட்சத்து 55ஆயிரத்து 377 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2019 – 21ம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட, ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 721 நிறுவனங்களை விட 26 சதவீதம் அதிகம்.
கடந்த நிதியாண்டில், தயாரிப்பு துறையில் புதிய நிறுவனங்களின் பதிவு, 45 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து 14ல் இருந்து, 33 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.இதே காலத்தில் சேவைகள் துறையில் புதிய நிறுவனங்கள் பதிவு, 16 சதவீதம் உயர்ந்துள்ளது.வேளாண் மற்றும் அதுசார்ந்த துறை நிறுவனங்களின் பதிவு, வியக்கத்தக்க அளவில் 112 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், கூட்டு நிறுவனங்களின் பதிவு 17 சதவீதம் உயர்ந்து, 36ஆயிரத்து 176ல் இருந்து, 42 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|