பதிவு செய்த நாள்
10 செப்2021
21:52

புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஒரு சில அலுமினியப் பொருட்களுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க, வர்த்தகத் தீர்வு தலைமை இயக்குனரகம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சீனாவில் இருந்து, ஒருசில அலுமினிய தகடு உருளைகள் குறைந்த விலையில் இறக்குமதியாவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வர்த்தகத் தீர்வு தலைமை இயக்குனரகம் ஆய்வு செய்ததில், சீன அலுமினியப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட வகை அலுமினிய தகடு உருளைகளுக்கு, டன் ஒன்றுக்கு 4,816 முதல், 33 ஆயிரத்து 226 ரூபாய் வரை பொருள் குவிப்பு வரி விதிக்க, வர்த்தகத் தீர்வு தலைமை இயக்குனரகம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|