முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார் முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார் ...  ‘அடல் பென்ஷன்’ திட்ட விதியில் மாற்றம் ‘அடல் பென்ஷன்’ திட்ட விதியில் மாற்றம் ...
பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2021
19:12

வாடிக்கையாளர்களுக்கான குறுகிய கால கடன் வசதியாக அமையும் பி.என்.பி.எல்., திட்டத்தின் சாதகங்கள், பாதகங்கள் பற்றி ஒரு பார்வை.


பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், ‘ஆன்லைன்’ நிறுவனங்களின் கவர்ந்திழுக்கும் திட்டங்களுக்கு மத்தியில், பி.என்.பி.எல்., கடன் திட்டமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. நிதி நுட்ப நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், ‘இ – -காமர்ஸ்’ நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகளும் இந்த கடன் வசதியை அளிக்கத் துவங்கி இருக்கின்றன.ஒரு சில நிறுவனங்கள் இந்த கடன் வசதியோடு, ‘கேஷ்பேக்’ சலுகையையும் அளிக்க முன்வந்துஉள்ளன.


ஏற்கனவே பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில் பலரும் இந்த கடன் வசதியை நாடிய நிலையில், தற்போது இத்திட்டம் மேலும் கவர்ந்திழுப்பதாக அமைகிறது. எனினும் இந்த வசதியை நாடும் முன், இதன் அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ஆன்லைன் வசதி


பொருட்களை வாங்கும் போது பணம் கொடுக்காமல், பின்னர் அதற்கான தொகையை செலுத்தும் வசதியே, ‘பை நவ் பே லேட்டர்’ – பி.என்.பி.எல்., என குறிப்பிடப்படுகிறது. ‘கிரெடிட் கார்டு’ இல்லாமல் இணையத்தில் பொருட்களை வாங்க முடியாதவர்கள், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்ய உதவும் வகையில் இந்த வசதி அறிமுகமானது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இணையத்தில் பொருட்களை வாங்கிவிட்டு, பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம். நிதி நுட்ப நிறுவனங்கள் இந்த வசதியை இ – -காமர்ஸ் தளங்களுடன் இணைந்து வழங்குகின்றன.


இந்த திட்டத்தை எளிதான குறுகிய கால கடன் வசதி போல கருதலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை செலுத்திவிட்டால், தனியே எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம். அதற்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால், மாதத் தவணையாக பணத்தை செலுத்தலாம். தவணை செலுத்தும் காலத்திற்கு உரிய வட்டி வசூலிக்கப்படும். தவணையை செலுத்த தவறினால் அபராதம் செலுத்த வேண்டும். கையில் பணம் இல்லாத போது, உடனடியாக பொருட்களை வாங்க இந்த வசதி ஏற்றதாக இருக்கும். எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு அந்த தொகையை செலுத்த வேண்டும்.


யாருக்கு ஏற்றது?


பி.என்.பி.எல்., திட்டம் அனைவருக்குமான கடன் வசதியை அளிப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பின் போது, பலருக்கு இந்த கடன் வசதி கைகொடுத்தது. தற்போது இ – காமர்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் இந்த வசதியை அதிகம் முன்னிறுத்துகின்றன. பொருட்களை வாங்க, சேவைகளை பெற எளிய வழி என்றாலும், இந்த வசதியை கவனமாக நாட வேண்டும். முதல் விஷயம், இ- – காமர்ஸ் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இவற்றில் உள்ள லாபம் காரணமாகவே இவற்றை முன்னிறுத்துகின்றன.


விளம்பரம், மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் பரப்பு என பலவிதங்களில் அவை பலன் பெறுகின்றன.அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொகையை செலுத்த முடியாமல், தவணை வசதியை நாடுவதாக இருந்தால், அதற்கான வட்டியை செலுத்த வேண்டும். மேலும், பல நேரங்களில் செயல்முறை கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். தொகையை செலுத்த தவறினால் அபராத கட்டணமும் சேரும். இவை எல்லாம் செலவை அதிகமாக்கும்.


இந்த கட்டணங்கள் சொற்பமாக தோன்றினாலும், நடைமுறையில் அதிக சுமையாகலாம். மேலும், இந்த கடன் வசதி தேவையில்லாத பொருட்களை கூட வாங்கத் துாண்டலாம். எனவே, சேமிப்பு பணத்தில் பொருட்களை வாங்குவதே சரி. தவிர்க்க இயலாமல் இந்த வசதியை நாடும் போது, அதற்கான மொத்த செலவை கணக்கிட்டுப் பார்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலக வங்கியின், ‘எளிதாக தொழில் செய்யும் நாடுகள்’ பட்டியல் தயாரிப்பில், முறைகேடுகள் நடந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த சில ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான கடன் திட்டங்களை அரசு கொண்டுவந்த போதிலும், 83 ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட் டிவி சந்தை, 65 சதவீத வளர்ச்சியை ... மேலும்
business news
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை செப்டம்பர் 12,2021
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)