பதிவு செய்த நாள்
14 செப்2021
23:15
புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான ‘ஸ்விப்ட்’ காரின் விற்பனை, 25 லட்சத்தை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கார் 2005ம் ஆண்டில் அறிமுகம் ஆனது. அறிமுகம் ஆகி 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை மொத்தத்தில் 25 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.கடந்த நிதியாண்டில் விற்பனையான அனைத்து நிறுவன கார்களிலும், முதலிடத்தை இந்த ஸ்விப்ட் கார் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் அன்புக்கு சான்றாக இந்த காரின் வெற்றி உள்ளதாகவும், வளர்ந்து வரும் இளம் வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்ந்து ஸ்விப்ட் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|