சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனைசென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை ...  உலகளவில் வேகமான வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா; அடுத்தது சீனா உலகளவில் வேகமான வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா; அடுத்தது சீனா ...
டி.வி.எஸ்., ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
19:48

‘ஏர்டெல்’ திட்டம்

தொலைதொடர்பு துறை நிறுவனங்களுக்கு, தவணைக்கான அவகாசம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த வாய்ப்பை, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம் பயன்படுத்தி, அதனுடைய ‘நெட்வொர்க்’ வசதியை மேம்படுத்திக் கொள்ளும் என, அதன் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.அத்துடன் சில பிரிவுகளில் கட்டண உயர்வை அமல்படுத்தும் எண்ணத்தில் நிறுவனம் இருப்பதையும் அவர் குறிப்பால் வெளிப்படுத்தி உள்ளார்.

‘டெஸ்லா’ நிச்சயம் வரும்

வாகன துறைக்கு வழங்கப்பட்டுள்ள உற்பத்தி அடிப்படையிலான 26 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை, இந்தியாவில் வாகனங்களை தயாரிக்க, ‘டெஸ்லா’ உள்ளிட்ட நிறுவனங்களை ஈர்க்கும் என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.அரசின் இந்த அறிவிப்பினால், ‘டெஸ்லா’ நிச்சயமாக ஈர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டி.வி.எஸ்., ஆர்வம்

டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் 125 சி.சி., மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பிரிவில், பெரிய அளவில் ஈடுபடும் முயற்சியில் இறங்கி உள்ளது.இந்தியாவில் 125 சி.சி., மோட்டார் சைக்கிள் விற்பனை, கடந்த 5 ஆண்டுகளில், 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும்; இது எதிர்கால வளர்ச்சிக்கான வாகன பிரிவாக இருப்பதாகவும், டி.வி.எஸ்., மோட்டார் தெரிவித்துள்ளது.

புதிய ‘யுனிகார்ன்’வேலை வாய்ப்பு டிஜிட்டல் தளமான, ‘அப்னா’ நிறுவனம், ‘யுனிகார்ன்’ நிறுவனம் எனும் அந்தஸ்தை எட்டி உள்ளது. ஒரு பில்லியன் டாலர் மதிப்பை கொண்ட, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் யுனிகார்ன் என அழைக்கப்படும்.தன்னுடைய செயலியை அறிமுகம் செய்த 21 மாதங்களுக்குள்ளாகவே, இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் 1.1 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது 8,140 கோடி ரூபாய் ஆகும்.

வீட்டிலிருந்து வேலைமின்னணு வர்த்தக நிறுவனமான,‘ஸ்நாப்டீல்’ புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் ஊழியர்கள், ஆறு மாத காலம் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே பேறுகால விடுமுறையாக, ஆறு மாதம் வழங்கப்படும் நிலையில், கூடுதலாக இந்த சலுகை வழங்கப்படுவதாக, நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக குழந்தை பெற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டையும், வேலையையும் சரிவர, ‘பேலனஸ்’ செய்ய முடியாமல் தவிப்பதால், இந்த சலுகை வழங்கப்படுவதாக ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 16,2021
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)