அதிகரித்து வரும் அன்னிய முதலீடு அதிகரித்து வரும் அன்னிய முதலீடு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் விசாரணையை துவக்கியது ‘அமேசான்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:12

புதுடில்லி:‘அமேசான் இந்தியா’ நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் மீது, லஞ்சம் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளதாக, அமேசான் தெரிவித்துள்ளது.குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்யாமல், ‘ஊழலை நிறுவனம் சகித்துக் கொள்ளாது’ என அமேசான் தெரிவித்துள்ளது.

‘தி மார்னிங் கான்டெக்ஸ்ட்’ தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த செய்தி நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்து, ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், அமேசானின் இந்திய சட்ட குழு, அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அமேசான், அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணையைத் துவக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், அதன் மூத்த நிறுவன ஆலோசகர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், குற்றச்சாட்டு குறித்த விரிவான தகவல்களையோ அல்லது விசாரணை எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பதையோ தெரிவிக்க இயலாது என, அமேசான் கூறியுள்ளது.அமேசான், இந்தியாவில் சந்தை போட்டி விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, இந்திய சந்தைகள் போட்டி ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறது.அதுமட்டுமின்றி, ‘பியூச்சர் குழுமம்’ அதன் வணிகங்கள் சிலவற்றை,‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனத்துக்கு 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததை எதிர்த்து, சிங்கப்பூர் சர்வதேச நடுவர்மன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை பெற்றிருக்கிறது, அமேசான்

இதற்கிடையே, பியூச்சர் குழுமம் இது சம்பந்தமாக, அமேசானுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளது.இப்படி அண்மைக் காலமாக பல வழக்குகளை மேற்கொண்டு வருகிறது அமேசான். இந்நிலையில், அதன் சட்ட பிரதிநிதிகள் மீது லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 21,2021
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)