‘அமேசான்’ நிறுவனத்துக்கு தடை  வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை ‘அமேசான்’ நிறுவனத்துக்கு தடை வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை ... சேமிப்பு திறனை அதிகரிக்கும் அமேசான் இந்தியா சேமிப்பு திறனை அதிகரிக்கும் அமேசான் இந்தியா ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
19:33

புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனமான, ‘புரானிக் பில்டர்ஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

இந்நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் வாயிலாக, 510 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டின் போது, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும், 9.45 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.மும்பையை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம், கடந்த 31 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மும்பை, புனே ஆகிய இடங்களில், நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கான வீடுகளை கட்டி, விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், இதற்கு முன் இரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக செபியிடம் அனுமதி பெற்றும், சந்தை சூழல் காரணமாக, முயற்சியை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 21,2021
அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)