‘சோனி’ உடன் இணைகிறது ‘ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ‘சோனி’ உடன் இணைகிறது ‘ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ...  ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம் ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
20:22

பதவிக் காலம் முடிவு‘

மாஸ்டர்கார்டு’ நிறுவனத்தின் செயல் தலைவர் அஜய் பங்கா, இந்த ஆண்டு இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்கு பின், நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜய் பங்கா, புனேயில் பிறந்தவர். 2016ல்இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் எனஅறிவித்திருந்த, ‘ஆசிய மேம்பாட்டு வங்கி’தற்போது 10 சதவீதமாக இருக்கும் என குறைத்துஅறிவித்துள்ளது.இரண்டாவது அலை காரணமாக, பொருளாதார மீட்சி கடுமையாக பாதிக்கப்பட்டதால்,வளர்ச்சிக் கணிப்பை குறைத்துள்ளதாக,இவ்வங்கி தெரிவித்துள்ளது.

பதவி நீட்டிப்பு

ஐ.எல்.எப்.எஸ்., குழுமத்தின் செயல் சாரா தலைவராக, உதய் கோட்டக் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பார் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, இவரது இந்த பதவிக் காலத்தை 12 மாதங்களுக்கு நீட்டித்து, இந்த ஆண்டுஅக்டோபர் 2ம் தேதிவரை பதவி வகிப்பார் எனஅறிவிக்கப்பட்டது. தற்போது மேலும்நீட்டிக்கப்பட்டுள்ளது.உதய் கோட்டக் தற்போது, ‘கோட்டக்மகிந்திரா வங்கி’யின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

பயனர் எண்ணிக்கை

‘மும்பை பங்குச் சந்தை’யின் முதலீட்டாளர் கணக்கு எண்ணிக்கை, கடந்த ஜூன் 6ம் தேதியில் இருந்து செப்டம்பர் 21ம் தேதி வரையிலானகாலத்தில், ‘ஒரு கோடி’ என்ற அளவுக்குஅதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 6ம் தேதியன்று, பயனர்களின் எண்ணிக்கை 7 கோடியாக இருந்தது. இதன் பின் 107 நாட்களில் 8 கோடியை எட்டியுள்ளது.

ரூபாய் மதிப்பு

சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘எவர்கிராண்டு’ கடனில் சிக்கியுள்ளதை அடுத்து, வளரும் நாடுகளுடைய பணத்தின் மதிப்புசரிவைக் காணும் என்றும், அதன் பாதிப்பு, இந்திய ரூபாயிலும் பிரதிபலிக்க கூடும் என்றும்‘எச்.டி.எப்.சி., வங்கி’யின் பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 22,2021
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)