பதிவு செய்த நாள்
26 செப்2021
01:53

புதுடில்லி:‘ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 100 – 120 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, மூலதன செலவுகளுக்கும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த இந்நிறுவனம், உருக்கு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடெங்கும் வலுவான வினியோக வசதியும் உள்ளது.இந்நிறுவனம், தெலுங்கானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை துவங்கும் திட்டத்திலும் உள்ளது.
இந்த தொழிற்சாலை வாயிலாக, ஆண்டு ஒன்றுக்கு 51 ஆயிரத்து 943 டன் பொருட்களை தயாரிக்க முடியும். இந்த ஆலையை நடப்பு நிதியாண்டில் துவக்கும் முடிவில் இந்நிறுவனம் உள்ளது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 255 கோடி ரூபாய் ஆகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|