பதிவு செய்த நாள்
26 செப்2021
01:54

புதுடில்லி:–இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து, இணைய குற்றவாளிகள் திட்டமிட்டு வருவதாக ‘சிஸ்கோ டாலோஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ராணுவ வீர்கள் மீதான சைபர் தாக்குதலுக்கான ஒரு திட்டத்துடன், இணைய குற்றவாளிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை கண்டுபிடித்துள்ளதாக, சிஸ்கோ டாலோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து, ஒரு இணைய இடுகையையும் வெளியிட்டுள்ளது.
அதில், அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தொடர்பான ரகசிய தகவல்களை பெறுவதற்காக, தீங்கிழைக்கும் வகையிலான ஆவணங்களை அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தில், இணைய குற்றவாளிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்பதை விரிவாக விவரித்துள்ளது.
குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தங்கள் மின்னஞ்சல்களுக்காக பயன்படுத்தும் ‘கவச்’ எனும் செயலியை அணுகி தகவல்களை கவர முயற்சித்து வருவது குறித்தும் விவரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், கடந்த 2020 டிசம்பரில், ‘மால்டாக்ஸ்’ எனும் தீங்கிழைக்ககூடிய ‘எம்.எஸ். டாக்குமென்ட்’ஐ பயன்படுத்தி, பல்வேறு தகவல்களை பெற முயற்சித்தது குறித்தும் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவற்றுக்கு எதிராக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளையும், அந்த இணைய பதிவில், சிஸ்கோ டாலோஸ் வெளியிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|