பொருளாதார மீட்சியை அடுத்து மோசடி முயற்சிகள் அதிகரிப்பு பொருளாதார மீட்சியை அடுத்து மோசடி முயற்சிகள் அதிகரிப்பு ...  ‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ்’ ‘பிரமல்’ வசம் வந்தது ‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ்’ ‘பிரமல்’ வசம் வந்தது ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2021
19:53

ரிலையன்ஸ் ஆதரவு

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிர்வாக குழுவில், செயல் சாரா இயக்குனராக,‘சவுதி அராம்கோ’ நிறுவன தலைவர் யாசீர் அல்- ருமாயனை நியமிப்பதை, ரிலையன்ஸ் நிறுவனம் ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த முடிவுக்கு பங்குதாரர்களின் ஒப்புதல் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும்; மற்ற ஒழுங்குமுறை சம்பந்தமான அனுமதிகள் பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 லட்சம் கார்டுகள்

எச்.டி.எப்.சி., வங்கியின் புதிய கிரெடிட் கார்டு வினியோகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, ரிசர்வ் வங்கி கடந்த மாதம் விலக்கிய பின், இவ்வங்கி 4 லட்சம் புதிய கார்டுகளை வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.தொடர் தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளிட்டவற்றால், எச்.டி.எப்.சி., வங்கி, புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு தடைவிதித்தது. பின் ஆகஸ்ட் மத்தியில் இத்தடை விலக்கப்பட்டது.

எக்ஸ்போ 2020

துபாயில் நாளை துவங்கவிருக்கும், ‘எக்ஸ்போ 2020’ல், எல் அண்டு டி., நிறுவனம், இந்திய தரப்பிலிருந்து ஒரு பகுதியாக பங்கேற்பதாக அறிவித்துள்ளது.இந்த எக்ஸ்போவில், எல் அண்டு டி., நிறுவனம், ஹைட்ரோகார்பன் பொறியியல், கழிவுநீர் சுத்திகரிப்பு, மின்சார பரிமாற்றம் மற்றும் வினியோக வணிகங்கள் ஆகியவற்றில் தன்னுடைய திறனை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தங்க கடன்

தனியார் துறையை சேர்ந்த, ‘இண்டஸ்இண்ட் பேங்க்’, கொச்சியை சேர்ந்த, ‘இண்டெல் மணி’ நிறுவனத்துடன் இணைந்து, தங்க அடமான கடன்களை வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.தங்க கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனத்துடன், வணிக வங்கி ஒன்று இத்தகைய அடமான கடன் வழங்குவதற்காக இணைவது, இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

வெள்ளி இ.டி.எப்.,

தங்க இ.டி.எப்., முதலீட்டு திட்டத்தை போலவே, வெள்ளி இ.டி.எப்., திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருப்பதாக, ‘செபி’ அறிவித்துள்ளதை, நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, இந்த இ.டி.எப்., இருக்கும் என கருதப்படுகிறது. வெள்ளியில் முதலீடுகளை மேற்கொள்ளவும், அவற்றை பணமாக்கவும் மிகவும் பாதுகாப்பான திட்டமாகும் இது, என்கிறார்கள் நிபுணர்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)