பதிவு செய்த நாள்
05 அக்2021
21:41

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சார்ந்து எழும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், ‘இந்திய மின்னணு வர்த்தக கூட்டமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, வணிகம், கொள்கை வகுப்பவர்கள் மற்றும் நுகர்வோர்கள் என அனைவரையும் ஒரே தளத்துக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சி.ஐ.இ., எனும் இந்த மின்னணு வர்த்தக கூட்டமைப்பு, இத்துறை சார்ந்த நிறுவனங்களின் உச்ச சங்கமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டமைப்பு லாப நோக்கமற்ற ஒரு அமைப்பாக, அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டுள்ளது.இதில் முக்கியமான மின்னணு வர்த்தக நிறுவனங்கள், சில்லரை விற்பனை நிறுவனங்கள், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் போன்றவை இடம்பெறுகின்றன.
சில்லரை வர்த்தகம் மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு, அரசு அல்லது பிற தொடர்புடைய ஏஜன்சிகளுடன் ஏற்படும் பொருளாதார அல்லது கொள்கை பிரச்னைகளை சரி செய்வது இதன் முக்கிய செயல்பாடாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|