பதிவு செய்த நாள்
05 அக்2021
21:54

'சார்ஜிங்' நிலையங்கள்
'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், 'டாடா பவர்' நிறுவனத்துடன் இணைந்து, மின்சார வாகனங்களுக்கு 'சார்ஜ்' ஏற்றுவதற்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தை அடுத்து, இரு நிறுவனங்களும் நாடு முழுதிலும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதுடன்; டி.வி.எஸ்., மோட்டார் இருக்கும் இடங்களில் சூரிய ஒளி தொழில்நுட்பத்தை வழங்கவும் முன்வந்துள்ளன.
வாராக் கடன் வங்கி
'வாராக் கடன் வங்கி' என அழைக்கப்படும், தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கி உள்ளது. வாராக் கடன் வங்கி, மும்பையை தலைமையகமாக கொண்டு, கடந்த ஜூலையில் நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனம், வங்கிகளின் வாராக் கடனுக்கு கடன் தொகை மதிப்பில் 15 சதவீதத்தை ரொக்க மாகவும்; மீதி 85 சதவீதத்தை அரசு உத்தரவாதத்துடன் கூடிய, 'செக்யூரிட்டீஸ் ரிசிப்ட்'ஆகவும் வழங்கும்.
சிக்கிய 'ஸ்ரீ' குழுமம்'
திவான் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு பின், இரண்டாவதாக, 'ஸ்ரீ' குழுமத்தை சேர்ந்த இரு நிறுவனங்கள், திவால் நடவடிக்கைக்குஉள்ளாக்கப்படுகின்றன.இதையடுத்து ரிசர்வ் வங்கி, 'ஸ்ரீ இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ்' மற்றும் 'ஸ்ரீ எக்யுப்மென்ட் பைனான்ஸ்' ஆகிய நிறுவனங்களின் நிர்வாக குழுவை மாற்றி அமைத்துள்ளது.ஸ்ரீ குழுமம் 15 வங்கிகளிடம், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாயை பத்திரங்கள் வாயிலாக வாங்கி உள்ளது.
புதிய பங்கு வெளியீடு
'பினோ பேமென்ட்ஸ் பேங்க்' புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது, 'செபி' அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,300 கோடி ரூபாய்திரட்ட உள்ளது.இதேபோல் கேரளாவை சேர்ந்த, 'பாப்புலர் வெகிக்கிள்ஸ் அண்டு சர்வீசஸ்' நிறுவனமும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை பெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|