பதிவு செய்த நாள்
05 அக்2021
21:56

புதுடில்லி:‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்கு வரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த செப்டம்பர் மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு, செப்டம்பரில், ஆகஸ்ட் மாதத்தை விட சற்று குறைந்து 55.2 புள்ளிகளாக உள்ளது. ஆகஸ்டில் இது 56.7 புள்ளிகளாக இருந்தது.இருப்பினும் இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். அந்த வகையில் செப்டம்பர் மாதத்திலும் வளர்ச்சி பெற்று உள்ளது.
தேவைகள் அதிகரித்துள்ளது, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவது உள்ளிட்ட காரணங்களினால், சேவைகள் துறை வளர்ச்சி அதிகரித்தே காணப்படுகிறது.இருப்பினும் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டம்பரில் வளர்ச்சி வேகம் சற்று குறைந்துள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|