பதிவு செய்த நாள்
05 அக்2021
22:04

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, ‘ஹிந்துஸ்தான் காப்பர்’ நிறுவனம் தனியார் மயமாக்கப்படும்போது, அந்நிறுவனத்தில் உள்ள அரசாங்கத்தின் பங்குகளை வாங்குவதற்கு, ‘வேதாந்தா குழுமம்’ தயாராக இருப்பதாக, அதன் நிறுவனர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாங்கள் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தை வாங்க விரும்புகிறோம். அது குறித்த முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். இன்னும் அதற்கான காலம் வரவில்லை.அரசு அதற்கான தேதியை அறிவித்தவுடன், அது மிகவும் உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும்.இந்தியாவில் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை மக்கள் நம்பத் துவங்குவர்.
நிறுவனம், அடுத்து வரும் இரண்டு, மூன்று ஆண்டுகளில், 1.50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இதில், 25 சதவீதம் தொழில்நுட்ப விஷயங்கள் சம்பந்தமாகவும்; 75 சதவீதம் இயற்கை வளங்கள் சம்பந்தமாகவும் இருக்கும். இந்தியாவில் அதிகளவிலான இயற்கை வளங்களின் இருப்பு உள்ளது.
இதுவரை நிலத்துக்கு மேலே வேளாண் விஷயங்களில் நாடு சாதித்து உள்ளது. இப்போது நாம் நிலத்துக்கு கீழே செல்ல வேண்டும்.நாம் இன்னும் தாமிரம், தங்கம், யுரேனியம், எரிவாயு அல்லது எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்யும் நாடாக இருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|