பதிவு செய்த நாள்
07 அக்2021
20:58
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், ‘7 லெவன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதன் கடைகளை இந்தியாவில் நடத்த உள்ளது.
இந்த 7 லெவன் நிறுவனம், நொறுக்கு தீனிகள், பானங்கள் போன்ற பொருட்கள் அடங்கிய சிறு கடைகளை, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது.தற்போது ரிலையன்ஸ் ரீட்டெய்ல், இந்த 7 லெவன் கடைகளை இந்தியாவில் துவங்குகிறது. முதல் கடையை மும்பையில் நாளை துவங்க இருக்கிறது.
கிஷோர் பியானி தலைமையிலான ‘பியூச்சர்’ குழுமம், 7 லெவன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கடைகளை துவங்க இருந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில்,ரிலையன்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.7 லெவன் நிறுவனம், 18 நாடுகளில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது.
‘இந்த நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் இத்தகைய கடைகளை துவக்குவதன் வாயிலாக, நுகர்வோர் சவுகரியமான ‘ஷாப்பிங்’ அனுபவத்தை பெறுவர்’ என, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் இஷா அம்பானி தெரிவித்துள்ளார்.
காலை 7 மணி முதல், இரவு 11 மணி வரை அனைத்து நாட்களிலும் இந்த கடை செயல்படும் என்பதால், இவற்றுக்கு 7 லெவன் என பெயரிடப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|