பதிவு செய்த நாள்
07 அக்2021
21:00
புதுடில்லி:‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம், அதன் ‘எக்ஸ்.யு.வி. 700’ கார்களுக்கான விலையில் சலுகைகளை அறிவித்திருந்த நிலையில், 57 நிமிடங்களில், 25 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
மகிந்திராவின் இந்த காரின் விலை 12.49 லட்சம் ரூபாயிலிருந்து, 22.99 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.இந்நிலையில் அறிமுக சலுகையாக, முதல் 25 ஆயிரம் கார்களின் விலை 11.99 லட்சத்திலிருந்து, 22.89 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப் பட்டது.இதையடுத்து, முதல் 25 ஆயிரம் கார்கள், 57 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுவிட்டது என, மகிந்திரா தெரிவித்துஉள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் வாகன பிரிவின் தலைமை செயல் அதிகாரி வீஜே நாக்ரா கூறும்போது, ‘நாங்கள் இன்று காலை 10 மணிக்கு முன்பதிவுகளை துவக்கினோம். இதற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|