பதிவு செய்த நாள்
08 அக்2021
22:13

மீண்டும் பேராசிரியர்
தலைமை பொருளாதார ஆலோசகர்கே.வி.சுப்ரமணியன், தன்னுடைய மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும், கல்வித் துறைக்கு திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஐதராபாதில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ கல்லுாரியில் பேராசிரியராக இருந்த சுப்ர மணியன், இப்பதவிக்கு கடந்த 2018 டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இவருக்கு முன்பாக, அர்விந்த் சுப்ரமணியன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார்.
டி.சி.எஸ்., லாபம்‘
டாடா’ குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 14.1 சதவீதம் அதிகரித்து, 9,624 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 46 ஆயிரத்து, 867 கோடி ரூபாய் என்றும், முந்தைய ஆண்டின் நிலையை விட 16.8 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், டி.சி.எஸ்., தெரிவித்துள்ளது.
டி.வி.எஸ்., புதிய வாகனம்
‘அர்பன், ஸ்போர்ட்’ மற்றும் ‘ரெயின்’ என, மூன்று விதமான பயண முறைகளுடன் கூடிய புதிய ‘டி.வி.எஸ்., அப்பாச்சே ஆர்.டி.ஆர்., 160 – 4வி’வாகனத்தை, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்அறிமுகம் செய்துள்ளது.டி.வி.எஸ்., அப்பாச்சே ஆர்.டி.ஆர்., 160 – 4வி ‘பைக்’கின் டில்லி ‘எக்ஸ் ஷோரூம்’ விலை 1.16 லட்சம் ரூபாயாகவும், பிரத்யேக பதிப்பின் விலை1.21 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘பிராண்டு’ துாதர்
அண்மையில், ‘யுனிகார்ன்’ அந்தஸ்து பெற்ற, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘காய்ன்சுவிட்ச் குபேர்’, அதன் ‘பிராண்டு’ துாதுவராக, பிரபல திரையுலக நட்சத்திரமான ரன்வீர் சிங்கை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.மெய்நிகர் நாணய வர்த்தக தளமான காய்ன் சுவிட்ச் குபேர் நிறுவனத்துக்கு, இந்தியாவில் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் சந்தை மதிப்பு 14,250 கோடி ரூபாய் ஆகும்.
தனியார் பங்கு முதலீடு
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தனியார் பங்கு முதலீடு 27 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கிடைத்த மொத்த தனியார் பங்கு முதலீட்டில், 33 சதவீதம் அலுவலக கட்டட பிரிவிலும், 22 சதவீதம் குடியிருப்பு கட்டட பிரிவிலும், தொழிற்சாலை கிடங்குகள் பிரிவில் 30 சதவீதமும் பெறப்பட்டுள்ளன.
‘வால்வோ’ விற்பனை
‘வால்வோ கார்ஸ்’ நிறுவனத்தின் விற்பனை, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 48 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்நிறுவனம் 856 ஆடம்பர கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு இதே காலகட்டத்தில் 1,270 கார்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|