பதிவு செய்த நாள்
08 அக்2021
22:23

புதுடில்லி:டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும், ‘மொபிகுவிக்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் பங்கு வெளியீட்டுக்கு வர விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 1,900 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 1,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 400 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும், ‘பஜாஜ் பைனான்ஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிஸ்கோ சிஸ்டம்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை, பங்கு வெளியீட்டின் போது விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப் படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் செலவு செய்ய மொபிகுவிக் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|