விமான நிறுவனங்கள் ஒன்றிணைப்பு டாடாவின் அடுத்த திட்டம் விமான நிறுவனங்கள் ஒன்றிணைப்பு டாடாவின் அடுத்த திட்டம் ...  வீட்டுக்கடன் வசதியை தேர்வு செய்யும் வழிமுறைகள் வீட்டுக்கடன் வசதியை தேர்வு செய்யும் வழிமுறைகள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2021
19:53

இணைய நிறுவன வரி

பிரான்ஸ் நாட்டில் உள்ள, ஓ.இ.சி.டி., எனும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, ’கூகுள், பேஸ்புக்’ போன்ற உலகளவிலான இணைய நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச வரிவிதிப்பு, 15 சதவீதமாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த அமைப்பில் இந்தியா உள்பட 136 நாடுகள் உள்ளன.

இதனையடுத்து, இந்தியா சந்தை சமநிலை வரி விதிப்பை இம்மாதம் 8ம் தேதியிலிருந்து வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.இ.சி.டி., 15 சதவீதம் வரி என நிர்ணயித்து ?உள்ளதால், தனியாக வேறு வரிகள் விதிக்க முடியாது. இந்த புதிய வரிவிதிப்பு 2023ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

சிக்கும் ஸ்ரீ குழுமம்

ரிசர்வ் வங்கி, ‘ஸ்ரீ’ குழுமத்தை சேர்ந்த இரு நிறுவனங்களின் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்வதையும், அந்நிறுவனங்களை நடத்த நிர்வாகியை நியமித்ததையும் எதிர்த்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஸ்ரீ குழுமம் முறையிட்டது.ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, திவால் முறையீட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது சட்ட தீர்ப்பாயம்.

வேகமெடுக்கும் ஜீப்

தங்கள் நிறுவனத்தின் வாகன விற்பனை, கடந்த செப்டம்பரில் இரு மடங்கு அதிகரித்து உள்ளதாக, ‘ஜீப் இந்தியா’ தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பரில் 565 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில், விற்பனை 1,377 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 8,713 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இடம் பெயரும் ‘டெஸ்லா’

‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமையகத்தை, தற்போது இருக்கும் கலிபோர்னியாவிலிருந்து, டெக்ஸாஸில் உள்ள ஆஸ்டினுக்கு மாற்ற இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆஸ்டினில் மிகப் பெரிய கார் மற்றும் பேட்டரி தயாரிப்புக்கான ஆலையை அமைத்து வருவதாகவும்; இதையடுத்தே இடம் மாற்றம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)