பதிவு செய்த நாள்
24 அக்2021
02:11

ரிலையன்ஸ் லாபம் அதிகரிப்பு
முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின், செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில், நிகர லாபம் 9,567 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில், நிகர லாபம் 13 ஆயிரத்து, 680 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அமேசானில் உரிமை குரல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் ‘அமேசான்’ பொருட்கிடங்கில் பணியாற்றும் 2,000 ஊழியர்கள், தாங்கள் ஏற்படுத்தி உள்ள சங்கத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.உலகளவில் ‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, அதிக ஊழியர்களை கொண்டிருக்கும் நிறுவனம் அமேசான். இதில் கிட்டத்தட்ட 9.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
வளர்ச்சி 7.7 சதவீதம்
நடப்பு நிதியாண்டில், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என, ‘இக்ரா ரேட்டிங்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புக்கு பின், பல துறைகளில் தற்போது மீட்சி ஏற்பட்டிருப்பதை அடுத்து, செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறுமுகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறை
நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு துறை, 2024 – 25ம் நிதியாண்டில் 22.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக வளர்ச்சி பெறும் என, மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு, 2014 – 15ம் நிதியாண்டில், 1.8 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம் ஈட்டியதால் நஷ்டம்
கடந்த நான்கு வர்த்தக நாட்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 10.29 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த நான்கு நாட்களில் ‘சென்செக்ஸ்’ 944 புள்ளிகளை இழந்துள்ளது.சந்தையின் ஏற்றத்தில் பங்குகளை விற்று லாபம் ஈட்டும் முயற்சியில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இறங்கியதை அடுத்து, சந்தை சரிவை கண்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|