பதிவு செய்த நாள்
24 அக்2021
02:19

புதுடில்லி:ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ மூன்று வாரத்தில் 1,700 கார்களை, அதன் புதிய விற்பனை திட்டத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. \
இந்நிறுவனம் அண்மையில் அதன் விற்பனை முறையை மாற்றி, புதிய திட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் அறிமுகம் செய்தது. இதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 1 – 2 லட்சம் ரூபாய் அளவுக்கு சலுகையை அறிவித்தது.இந்த புதிய திட்டத்தின் படி, வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை நிறுவனமே நேரடியாக விற்பனை செய்கிறது. ‘இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வாங்கும் அனுபவத்தை முகவர்களால் வழங்க முடிகிறது.
‘விலை விபரங்களும் மிகவும் வெளிப்படையானதாக இருக்கும். நிறுவனத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நெருங்கிய தொடர்பும் ஏற்படும்’ என பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|