ஆயிரம் சந்தேகங்கள் : ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்யலாமா?ஆயிரம் சந்தேகங்கள் : ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்யலாமா? ...  ‘திறன் தாக்கப் பத்திரம்’ இந்தியாவில் அறிமுகம் ‘திறன் தாக்கப் பத்திரம்’ இந்தியாவில் அறிமுகம் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
21:45

வாகன கடன் வசதி

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், வாகனகடனுக்கு பேங்க் ஆப் மஹாராஷ்டிரா உடன்ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், ‘நியூ அமேஸ், ஜாஸ், டபிள்யுஆர்–வி, சிட்டி’ ஆகிய கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெறலாம் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பெட்ரோல் நிலையம்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், பிரிட்டனின் பி.பி குழுமத்துடன் இணைந்து ‘ஜியோ–பிபி’ என்ற பெயரில் நவி மும்பையின் நவ்டே நகரில் முதல் பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.இங்கு, மின்சார வாகனங்களை ‘சார்ஜ்’ செய்யும் வசதியும் உள்ளது.

ரூ.11,168 கோடி கடனுக்கு ஒப்புதல்

விரைவு கடன் திட்டத்தின் கீழ், வங்கிகள், நடப்பு அக்.,ல், 2 லட்சம் பேருக்கு 11 ஆயிரத்து 168 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.இதில், ஒரு லட்சம் பேருக்கு வர்த்தக கடன் 6,268 கோடி ரூபாய்; 5,058 பேருக்கு வாகனக் கடன் 448 கோடி ரூபாய்; 3,401 பேருக்கு வீட்டு வசதிக்கடனுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக மத்தியநிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக குறியீடு உயர்வு

இந்தாண்டு ஜூலை–செப்., காலாண்டில் ‘வர்த்தக நம்பிக்கை குறியீடு’ முந்தைய காலாண்டை விட 90 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, 80 சதவீதம் உயர்ந்துள்ளது என, என்.சி.ஏ.இ.ஆர்.,ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)