பதிவு செய்த நாள்
26 அக்2021
22:01

புதுடில்லி:இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, நைட் பிராங்க் ஆகியவை இணைந்து ரியல் எஸ்டேட் துறையினரின் நம்பிக்கை குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா இரண்டாவது அலையால், இந்தாண்டு ஏப்., – ஜூன் காலாண்டில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி குறித்து, அத்துறை சார்ந்தவர்களிடம் அவநம்பிக்கை இருந்தது. ஆனால், ஜூலை– செப்., காலாண்டில் நம்பிக்கை அதிகரித்து உள்ளது. அதனால், புதிய சாதனையாக, ரியல் எஸ்டே் துறையின் நம்பிக்கை குறியீடு 63 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 35 புள்ளிகளாக இருந்தது. அதுபோல, அடுத்த ஆறு மாதங்களுக்கான ரியல் எஸ்டேட் துறையின் நம்பிக்கை குறியீடு, 72 புள்ளி களாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 56 புள்ளிகளாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|