பதிவு செய்த நாள்
30 அக்2021
19:36
புதுடில்லி:உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான ‘டாடா மோட்டார்ஸ்’ விரைவில் மின்சார சிறு வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு, சில மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து, மின்சார சிறு வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் இறங்கி இருக்கிறது.இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக் கூறியதாவது:
மின்சார வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, வழக்கமான வாகனங்களுக்கானதை விட மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், வரவேற்பு அதிகரித்து வருகிறது.மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக, டீசலில் இயங்கும் சிறிய வர்த்தக வாகனங்களுக்கான தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது.இதற்கிடையே பேட்டரிக்கான விலையும் குறைந்து வருவதன் காரணமாக, இரு பிரிவு வாகனங்களுக்கு இடையேயான விலை வித்தியாசமும் குறைந்து வருகிறது.
தற்போது மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ‘பூஜ்ஜிய உமிழ்வு’ இலக்குகளை கொண்டு இருக்கின்றன. எனவே, அவை மின்சார வாகனங்களை விரும்புகின்றன.இதனால் அவர்களுடன் நாங்கள் கூட்டு வைத்து செயல்பட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|