பி.என்.பி.எல்., பயன்பாட்டில்  மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள் பி.என்.பி.எல்., பயன்பாட்டில் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள் ... ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் வாய்ப்புகளை வழங்கும் கோஐபிபோ ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் வாய்ப்புகளை வழங்கும் கோஐபிபோ ...
ஆயிரம் சந்தேகங்கள் ‘சில்ரன் பெனிபிட் பண்டு’ என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
01:08

‘ஸ்பைஸ் இந்தியா’ லிமிடெட்டில் முதலீடு செய்தேன். மூன்று மாதங்கள் வட்டி வந்தது. அதன்பின் ஓராண்டு கடந்துவிட்டது. இந்த நிறுவனத்தை பற்றி எந்த தகவலும் இல்லை. நிதி நிறுவனங்களுக்கு ஏதாவது தீர்ப்பாயம் உள்ளதா?

ஸ்ரீதரன், கோவை.

உங்களை போன்றோரது கேள்விகளை படிக்கும்போது,மிதமிஞ்சிய வருத்தமும், வேதனையும் தான் ஏற்படுகிறது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 6 ஆயிரம் அல்லது 8 ஆயிரம் ரூபாய் வட்டி தருகிறேன்; இரண்டாம் ஆண்டு முடிவில் மொத்த தொகையையும் திருப்பி தருகிறேன் என்று சொல்லும் ஏமாற்று பேர்வழிகளை எப்படி நம்புகிறீர்கள்?

வருடத்துக்கே 7 சதவீத வட்டி ஈட்ட முடியாத சூழலில், 72 முதல் 96 சதவீதம் வட்டி என்பது உங்களது ‘காமன்சென்ஸுக்கே’ சவால் விடுவதுபோல் இல்லையா? எது கண்ணை மறைக்கிறது? இதற்கெல்லாம் தீர்ப்பாயம் இல்லை; போலீஸ் ஸ்டேஷனில் கம்ளெயின்ட் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டியது தான்.

என் சகோதரி ஊனமுற்றவர். மாநில அரசின் 1,000 ரூபாய் மாத உதவித்தொகையை ஸ்டேட் பேங்க் மூலம் பெற்றுக் கொண்டிருந்தார்; திருமணம் ஆகவில்லை. 5 மாதம் முன் இறந்து விட்டார். வாரிசாக என்னை இணைத்ததால், கணக்கில் உள்ள தொகை பெற்றுக்கொண்டு அக்கவுன்ட்டை குளோஸ் செய்து விட்டேன். அவர் இறப்பிற்கு 30,000 ரூபாய் காப்பீடு கிடைக்குமா?

வெங்கடேசன், வாட்ஸ் ஆப்.

மாற்றுத்திறனாளி இறப்புக்கு காப்பீட்டு தொகை வழங்கும் திட்டம் ஏதும் தமிழக அரசில் இல்லை. மாற்றுத்திறனாளியின் மறைவை ஒட்டி, ஈமச்சடங்கு செய்ய 17 ஆயிரம் ரூபாய் வரை கோரலாம் என்பது மட்டுமே உண்டு.

மதுரையில் உருவாகி வரும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குழுமம், 500 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட மிகப்பெரிய கட்டுமானங்களை மேற்கொள்ளவிருக்கிறது; முதலீடு செய்யலாமா?

இளங்கோவன், சிங்கப்பூர்.

நீங்கள் குறிப்பிடும் நிறுவனம் வளர்ந்து முன்னுக்கு வரட்டும். பங்குச் சந்தைக்கோ, கடன் பத்திரச் சந்தைக்கோ வரும்போது, அவர்களுடைய செயல்பாடுகளின் மீது அப்போது நம்பிக்கை இருந்தால் முதலீடு செய்யுங்கள்.எதற்கு அரச மரத்தை சுற்றிவிட்டு, அதற்குள் அடிவயிற்றை தொட்டுப் பார்க்கிறீர்கள்?

என் கணவர் ‘யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’வின் ‘ராஜ்லக்ஷ்மி யூனிட் ஸ்கீமில்’ 350 யூனிட்டுகள் 1993ல் வாங்கியுள்ளார். 2011ல் இது மெச்சூர் ஆகியுள்ளது. எப்படி பணத்தை பெறுவது?

சாந்தி மோகன், சென்னை.

செப்டம்பர் 2000ம் ஆண்டுடன் இந்த ராஜ்லக்ஷ்மி யூனிட் திட்டம் கைவிடப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள சொல்லி, யூ.டி.ஐ., நிறுவனம், தொடர்ந்து அறிவிப்பு கொடுத்து, பெரும்பாலான தொகையை கொடுத்துவிட்டது. மிச்சமிருக்கும் தொகையை அது, முதலீட்டாளர் கல்வி முயற்சிகளுக்கு அளித்துவிட்டது என்று அறிகிறேன்.அருகில் உள்ள யு.டி.ஐ., அலுவலகத்தையோ, முகவரையோ அணுகுங்கள்.

‘சில்ரன் பெனிபிட் பண்டு’ என்றால் என்ன? இத்தகைய பண்டுகளில் நீண்ட காலம் முதலீடு செய்வதால் ஏதேனும் லாபம் உண்டா? ஏன் ஒரு சில பண்டு நிறுவனங்கள் இதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன?

விக்னேஷ், ராஜபாளையம்.

ஓய்வு காலத்துக்கு தேவைப்படும் வருவாயை ஈட்டித் தர எப்படி ஒரு பண்டு உண்டோ, அதேபோன்று பிள்ளைகளின் எதிர்கால கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுவதற்கு என்றே இந்த மியூச்சுவல் பண்டு வகைபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ‘லாக்-கின்’ காலம் உண்டு. உங்கள் பிள்ளை, கல்லுாரிக்கு வரும்போது, கட்டணங்கள் அதிகம் இருக்கலாம்.அதற்கான மூலதனத்தை முன்கூட்டியே தயாரித்து கொள்கிறீர்கள் என்று இதற்கு அர்த்தம். 11 பண்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. எதுவும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவில்லையே!

‘மைக்ரோ டெக்னாலஜிஸ் இந்தியா’ லிமிடெட்டின் வைப்பு நிதியில் 2012ல் முதலீடு செய்துள்ளேன். இது 2015ல் முதிர்வு அடைந்து, 6 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை முதலீட்டு தொகையும், வட்டியும் கிடைக்கவில்லை. முதல் ஒரு மாதம் மட்டும் வட்டி கிடைத்தது. எப்போது, முதல் கிடைக்கும்?

சிவராமன், சென்னை.

கடந்த 2014லேயே இந்த கம்பெனி மோசம் போய்விட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ ‘லிக்விடேட்டர்’ அலுவலகம், இந்நிறுவன சொத்துக்களை விற்பனை செய்து, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க முயற்சி எடுத்து வருகிறது.samapakmum@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இந்த லிக்விடேட்டரை தொடர்பு கொள்ளலாம்.

எல்.ஐ.சி., பாலிசி எண் மறந்துவிட்டது. அந்தப் பத்திரமும் காணவில்லை. ஏஜன்டின் எண்ணும் தொலைந்துவிட்டது. என் பெயரையும் பிறந்த தேதியையும் மட்டும் வைத்துக் கொண்டு, பாலிசி எண்ணை கண்டுபிடிக்க முடியுமா?

ராஜேஷ், திண்டுக்கல்.

தாராளமாக முடியும். அருகில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகத்துக்கு சென்று தெரிந்த விபரங்களை சொல்லி, தேடச் சொல்லுங்கள் அல்லது அடுத்த பிரீமியம் செலுத்துவதற்கு நினைவூட்டு கடிதம் வரும். அதில் பாலிசி எண் இருக்கும்.ஆனாலும், இவ்வளவு அஜாக்கிரதை கூடாது சார். குறைந்தபட்சம் உங்கள் மொபைல் நோட்ஸில் இந்த விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாமே!

என்னுடைய 80 லட்சம் மதிப்புள்ள பூர்வீக வீட்டிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை வருகிறது. இதை விற்று இரண்டு குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவிற்கு எப்படி, எதில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவது என, ஆலோசனை கூறுங்கள்.

தருண், கோவை.

80 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது உங்களை போன்ற வீட்டு ஓனர்களுக்கே உரிய அதீத கற்பனை. விற்பனை செய்யப் போகும்போது, இதில் பாதியளவு வந்தாலே பெரிய விஷயம். அடிமாட்டு ரேட்டுக்கு கேட்பார்கள்; வருத்தமே மிஞ்சும்.

ஒரே வழி, குறிப்பிட்ட விலை வந்தால் தான் விற்பனை செய்வேன் என்று இலக்கு நிர்ணயித்து கொண்டு பிடிவாதமாக இருங்கள்.உங்கள் இரண்டு குழந்தைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு இந்த வீட்டை நம்பிக் கொண்டு இராதீர்கள்.

கையில் எவ்வளவு சேமிக்க முடியுமோ, அதை மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,யில், தொடர்ந்து போட்டு வாருங்கள். அது அவர்களுடைய எதிர்காலத்துக்கு உதவும்.

என்னுடைய மறைந்த தம்பி மனைவி, எல்.ஐ.சி.,யில் போட்ட முதலீட்டில் என் பெயரை வாரிசுதாரராக சேர்த்துள்ளார். அந்த பாலிசி எனக்கு மிகவும் தாமதமாக, பாலிசி முடிந்த பின் தான் தெரிந்தது. அதை ‘க்ளெய்ம்’ செய்யப் போனபோது தான், அத்தொகை முழுதுமாக அவளின் வங்கிக்கு அனுப்பப்பட்டது தெரிந்தது. வங்கியில் வாரிசுதாரராக என் பெயரில்லை. அவளின் அம்மா பெயர் உள்ளது; அவளுக்கு குழந்தைகளில்லை. அவளுடைய அம்மா, அப்பா, சொந்தக்காரர் யாவரும் வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டனர். நான் அந்த பாலிசி தொகையை அடைய என்ன செய்ய வேண்டும்?

முரளிதரன், மின்னஞ்சல்.

இந்த விஷயத்தில், எல்.ஐ.சி.யிடம் இனிமேல் ஒன்றும் இல்லை. அவர்கள் வேலையை அவர்கள் ஒழுங்காக செய்துவிட்டார்கள். உங்கள் தம்பி மனைவிக்கு வேறு யாரும் வாரிசு தாரர் இல்லை, நீங்கள் மட்டுமே வாரிசு என்பதை வங்கிக்கு நிரூபிக்க வேண்டும். வங்கி மேலாளரையும் நல்ல வக்கீலையும் பாருங்கள்; வழிகாட்டுவர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசை. எப்படி ஆரம்பிக்க வேண்டும்? என்னவெல்லாம் கற்க வேண்டும்?

காயத்ரி, மின்னஞ்சல்.

நான்கு அற்புதமான ஆங்கில வணிக நாளிதழ்கள் வெளிவருகின்றன. ஏதேனும் ஒன்றுக்கு சந்தாதாரர் ஆகுங்கள். வரிவிடாமல் படித்துவிடுங்கள். மூன்று வணிக தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு ஆகின்றன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமேனும் அவற்றை பாருங்கள். முதலில், பீக் ஹவரில் மவுண்ட் ரோடில் சைக்கிள் ஓட்ட தெரியாமல் பேந்த பேந்த முழிப்பது போல் இருக்கும். புரியாத புதிய சொற்கள், உங்கள் மண்டைக்குள் வளைய வரும். அவற்றுக்கு அர்த்தம் தேட துவங்குவீர்கள். அடுத்த ஓராண்டில், நீங்களே அடுத்தவர்களுக்கு ஸ்டாக் டிப்ஸ் அனுப்பும் அளவுக்கு உயர்ந்துவிடுவீர்கள்; என்ஜாய் இன்வெஸ்டிங்!

வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,
pattamvenkatesh@gmail.com ph:98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)