பதிவு செய்த நாள்
02 நவ2021
20:02

புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 42.33 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, அரசின் அறிக்கை தெரிவித்து உள்ளது.நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 42.33 சதவீதம் அதிகரித்து, 2.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்றுமதி 1.87 லட்சம் கோடி ரூபாயாகவும்; 2019ம் ஆண்டு அக்டோபரில் 1.97 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல், கடந்த அக்டோபரில் இறக்குமதி 62.49 சதவீதம் அதிகரித்து, 4.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டு அக்டோபரில் 2.56 லட்சம் கோடி ரூபாயாகவும்; 2019 அக்டோபரில் 2.85 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.வர்த்தக அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 7.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.தங்கம் இறக்குமதி அக்டோபரில் 38 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இது 104 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|