பதிவு செய்த நாள்
02 நவ2021
20:20

மின் நுகர்வு அதிகரிப்பு
நாட்டின் மின்சார நுகர்வு, அக்டோபர் மாதத்தில் 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதையும் மீறி, மின்சார நுகர்வு அக்டோபரில் அதிகரித்து உள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
கடந்த இரு மாதங்களாக, இந்திய நிதி சந்தைகளில் முதலீட்டை மேற்கொண்டு வந்த அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபரில் அதிகம் விற்பனை செய்துள்ளனர். கடந்த அக்டோபரில் அன்னிய முதலீட்டாளர்கள் 12 ஆயிரத்து, 278 கோடி ரூபாயை சந்தையிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.
பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்
‘கேப்பிட்டல் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது. இவ்வங்கிக்கு பஞ்சாப், டில்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில், மொத்தம் 159 கிளைகள் உள்ளன.
சுங்க கட்டண வசூல்
‘பாஸ்டேக்’ வாயிலான சுங்க கட்டண வசூல், அக்டோபரில் 3,356 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். மொத்தம் 21.42 கோடி பரிவர்த்தனைகள் அக்டோபரில் நடைபெற்றுள்ளன. இது, போக்குவரத்து மற்றும் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து உள்ளதை காட்டுகிறது.
ரிலையன்சின் மாடி தியேட்டர்
இந்தியாவின் முதல் திறந்தவெளி மாடி டிரைவ் இன் தியேட்டரை, மும்பையில் 5ம் தேதியன்று துவக்க இருப்பதாக, ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 290 கார்கள் வரை இந்த தியேட்டரில் நிறுத்தி படம் பார்க்கலாம். பி.வி.ஆர்., நிறுவனத்துடன் இணைந்து, இந்த திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது, ரிலையன்ஸ்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|