பதிவு செய்த நாள்
02 நவ2021
20:24

புதுடில்லி:‘சபையர் புட்ஸ் இந்தியா’, நிறுவனம், 9ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இந்நிறுவனம், ஒரு பங்கின் விலை 1,120- – 1,180 ரூபாய் என நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
‘கே.எப்.சி., பிட்சா ஹட்’ போன்ற துரித சேவை உணவகங்களை இந்தியாவில் நடத்தி வரும், ‘சபையர் புட்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து அண்மையில் பெற்றது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு 9ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1.76 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்நிறுவனம் 2,073 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.
கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனம் 204 கே.எப்.சி., உணவகங்களை இந்தியா மற்றும் மாலத்தீவுகளிலும், 231 பிட்சா ஹட் உணவகங்களை இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் ஆகியவற்றிலும் நடத்தி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|