பதிவு செய்த நாள்
04 நவ2021
22:46

புதுடில்லி:முன் தேதியிட்ட வரி குறித்த சர்ச்சையை தீர்க்கும் வகையில், இந்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்ததை அடுத்து, இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான வழக்குகளை கைவிட ஒப்புக்கொள்வதாக, பிரிட்டனை சேர்ந்த ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வழக்குகளை கைவிடுவதை அடுத்து, அது 7,900 கோடி ரூபாயை திரும்ப பெறும் என தெரிகிறது.கடந்த 2012ல், முன்தேதியிட்ட வரிச் சட்ட திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, 2012ம் ஆண்டு மே 28க்கு முன்பே, அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அவற்றின் சொத்துக்களை விற்பனை செய்திருந்தாலும், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை எதிர்த்து, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அங்கு, இந்நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.அத்துடன் தங்களிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாக கூறி, அதற்கான முயற்சிகளிலும் இறங்கியது.
இந்நிலையில், இந்திய அரசு, முன்தேதியிட்ட வருமான வரி சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையினால், இதற்கு முன் நிறுவனங்களிடமிருந்து வசூல் செய்திருந்த தொகையை திருப்பி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கெய்ர்ன் எனர்ஜி, வோடபோன் போன்ற நிறுவனங்களிடம் வசூலித்த தொகை திருப்பி வழங்க படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட கெய்ர்ன் நிறுவனம், இந்திய அரசுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|