பதிவு செய்த நாள்
04 நவ2021
22:54

புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தை ஒட்டி, வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு பொருட்கள் விற்பனை அதிகமாக இருக்கும் என இத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 55 அங்குல பெரிய டிவிக்கு, அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஏற்றாற்போல், கடந்த 2ம் தேதியன்று கொண்டாடப்பட்ட ‘தந்தேரஸ்’ பண்டிகை நாளின் போது, விற்பனை 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்த நாள் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு உகந்த நாளாக மக்களால் கருதப் படுகிறது. குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்களில், தந்தேரஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தற்போது ‘செமிகண்டக்டர் சிப்’களுக்கான வினியோகத்தில் தட்டுப்பாடுகள் இருந்த போதும், அதையும் மீறி இந்த ஆண்டு, ‘சோனி, பானாசோனிக், எல்.ஜி., சாம்சங்’ போன்ற நிறுவனங்களின் விற்பனை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. நடப்பு பண்டிகை காலத்தில், நுகர்வோர் நம்பிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக, கிராமப்புறங்களையும் எளிதாக அணுக முடிவதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக, இந்த பண்டிகை கால விற்பனை, மொத்த ஆண்டு விற்பனையில் 30 சதவீதம் அளவுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பண்டிகையின் போது, 55 அங்குல அளவிலான பெரிய டிவிகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த சாதகமான போக்கு தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|