பதிவு செய்த நாள்
09 நவ2021
20:32

புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக அழைக்கப்படும்,
‘பை நவ் பே லேட்டர்’. அதாவது, ‘இப்போது வாங்குங்கள்; பிறகு செலுத்துங்கள்’ எனும் வணிகம்.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை எதுவுமின்றி, பொருட்களை எளிதாக தவணை திட்டத்தில் வாங்குவதற்கு, இப்போது பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.
குறிப்பாக, ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை இந்த திட்டம் மிகவும் ஈர்த்து வருகிறது.முன்பணம் எதுவும் செலுத்தாமல், உடனடியாக பொருட்களை வாங்க முடியும் என்பதாலும்; இக்கடனுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வட்டி எதுவும் கிடையாது என்பதாலும், இந்த திட்டத்துக்கு மிக வேகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது 25 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் சந்தையாக இருக்கும் இந்த பி.என்.பி.எல்., தொழில், 2026ல் 3.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக ஏற்றம் பெறும் என, ஆராய்ச்சி நிறுவனமான ‘ரெட்சீர்’ தெரிவித்து உள்ளது.மேலும் பி.என்.பி.எல்., பயனர்கள் எண்ணிக்கை, தற்போது 1 – 1.5 கோடியாக இருப்பது, 2026ல் 8 – 10 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பி.என்.பி.எல்., நிறுவனங்கள், தற்போது அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்குகின்றன.இது கிரெடிட் கார்டுகள் அனுமதிக்கும் தொகையைவிட குறைவாக உள்ளது. எனவே, கிரெடிட் கார்டு சந்தையை உலுக்குவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொரோனாவுக்கு பிறகு அதிகம் பேர் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்க துவங்கி உள்ளனர். இதனையடுத்து, எளிதான கடன் வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், இப்பிரிவில் இன்னும் நிறைய நிறுவனங்கள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|