பெரும் பணக்காரர் ஆனார் ‘நைக்கா’ பல்குனி நாயர் பெரும் பணக்காரர் ஆனார் ‘நைக்கா’ பல்குனி நாயர் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 அதிகரிப்பு ...
3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்தார் எலான் மஸ்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2021
21:57

புதுடில்லி:‘டெஸ்லா’ நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார்.
‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்’ வரலாற்றில், இரண்டே நாட்களில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்த முதல் நபராகி இருக்கிறார், எலான் மஸ்க். இதற்கு முன் ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ், தன்னுடைய மனைவி மெக்கன்சி ஸ்காட்டை 2019ல் விவாகரத்து செய்தபோது, கிட்டத்தட்ட 2.66 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தார்.

இப்போது அதைவிட அதிக இழப்பை எலான் மஸ்க் சந்தித்துள்ளார்.எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில் இவ்வளவு பெரிய தொகையை இழக்க காரணமாக இருந்தது, டுவிட்டரில் அவர் கேட்ட கேள்வி ஒன்று தான்.கடந்த வார இறுதியில், தன்னுடைய டுவிட்டரில், டெஸ்லா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்கலாமா என தன்னை பின்தொடர்பவர்களிடம் கேட்டிருந்தார், எலான் மஸ்க்.

இதற்கிடையே, எலான் மஸ்கின் இந்த டுவிட்டர் வாக்கெடுப்புக்கு முன்னதாக, அவரது சகோதரர் கிம்பல் தன்னுடைய பங்குகளை விற்றதும் சந்தையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, தன்னுடைய தனிப்பட்ட கடனை அடைக்கவே, பங்குகளை எலான் மஸ்க் விற்க விரும்புகிறார் என்றும் செய்திகள் வந்தன.இது போன்ற காரணங்களால், டெஸ்லா நிறுவன பங்குகள் விலை சரிந்து, பெரும் இழப்பை சந்தித்துள்ளார், எலான் மஸ்க்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)