பதிவு செய்த நாள்
12 நவ2021
20:58

ரிலையன்ஸ் வசமானது ‘அமன்டே’
‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த ‘எம்.ஏ.எஸ்., ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, பெண்களுக்கான உள்ளாடை வணிகமான ‘அமன்டே’ பிராண்டை கையகப்படுத்தி உள்ளது.கடந்த 2007ல் ‘அமன்டே பிசினஸ்’ துவக்கப்பட்டது. இது, பெண்களுக்கான பிரீமியம் உள்ளாடைகளை ‘அமன்டே’ எனும் பிராண்டில் விற்பனை செய்து வருகிறது.
கோடீஸ்வரர்களாக மாறிய ஊழியர்கள்
‘பேடிஎம்’ நிறுவனம் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்ததை அடுத்து, இந்நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் 350 பேரின் நிகர மதிப்பு, 1 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவர்கள் அனைவரிடமும் குறிப்பிடத்தக்க அளவிலான பேடிஎம் பங்குகள் இருந்ததை அடுத்து, அவற்றின் மதிப்பு தற்போது உயர்ந்ததால், இந்த லாபத்தை சம்பாதித்துள்ளனர்.
ஐ.பி.ஓ.,க்கு வருகிறது ‘ட்ரூம்’
வாகனங்களுக்கான ‘ஆன்லைன்’ சந்தை நிறுவனமான ‘ட்ரூம் டெக்னாலஜி’ 3,000 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது 2,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; 1,000 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்கள் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.
கடன் கேட்கும் ‘வோடபோன்’
தொடர்ந்து நிதி சிக்கல்களில் தவித்து வரும் ‘வோடபோன் ஐடியா’ புதிதாக கடன் வாங்குவதற்காக ‘பாரத ஸ்டேட் வங்கி’யை அணுகியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு, மீண்டும் லாப பாதைக்கு திரும்புவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு, வங்கி தரப்பில் வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி
நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடான, ஐ.ஐ.பி., செப்டம்பரில் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி 2.7 சதவீதமாக செப்டம்பரில் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, தொழில் துறை உற்பத்தி 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|