பதிவு செய்த நாள்
12 நவ2021
21:03

புதுடில்லி:புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 5.18 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, கவுதம் அதானி தெரிவித்து உள்ளார்.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில், கிட்டத்தட்ட 5.18 லட்சம் கோடி ரூபாயை, அடுத்த பத்து ஆண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.மேலும், மிகவும் விலை மலிவாக ஹைட்ரஜனை தயாரித்து வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வரும் 2030ம் ஆண்டில், உலகின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக, அதானி குழுமம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த பத்து ஆண்டுகளில் இதற்காக 5.18 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளோம்.
உலகின் வேறு எந்த நிறுவனமும், இதுவரை இப்பிரிவில் இவ்வளவு தொகையை முதலீடு செய்ய முன்வந்ததில்லை.எனவே, மலிவான பசுமை மின்சாரம், மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகளாவிய நிறுவனங்களில் நாங்கள் முன்னணியில் இருப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|