பதிவு செய்த நாள்
12 நவ2021
21:07

புதுடில்லி:‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கும் முயற்சியிலிருந்து, தனியார் பங்கு நிறுவனமான ‘ஐ ஸ்கொயர்டு கேப்பிட்டல்’ பின்வாங்கி உள்ளது.
53 சதவீத பங்குகள்
அரசு தன் வசம் இருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனையடுத்து, மூன்று நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்தன. அவற்றில் ஒன்று, ஐ ஸ்கொயர்டு கேப்பிட்டல் நிறுவனம்.
களத்தில் உள்ளன
அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள தன்னுடைய துணை நிறுவனமான ‘திங் கேஸ்’ வாயிலாக பாரத் பெட்ரோலியத்தை வாங்க விரும்புவதாக தெரிவித்திருந்தது.ஆனால், தற்போது இந்நிறுவனம் ஏலத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்து இன்னும் அரசுக்கு அதிகாரப்பூர்வமாக எதையும் இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
தற்போது, பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதற்கு, ‘வேதாந்தா குழுமம்’ மற்றும் ’அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட்’ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே களத்தில் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|