பதிவு செய்த நாள்
12 நவ2021
21:10

புதுடில்லி:வெள்ளி இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக, விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது,
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’. பங்குச் சந்தைகள் மூலம் கமாடிட்டிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, வெள்ளி இ.டி.எப்., திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, தங்க இ.டி.எப்., நிதிகள் கருதப்படுகின்றன. இவை, தங்கத்தை அடிப்படையாக கொண்ட, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளாகும்.
இந்நிலையில் தற்போது, வெள்ளி இ.டி.எப்., திட்டங்களையும் அறிமுகம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளி அல்லது வெள்ளி தொடர்பானவற்றில் பிரதானமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டு திட்டமாகும் இது என, செபி தெரிவித்து உள்ளது.தங்க இ.டி.எப்., திட்டங்கள் போலவே, இந்த வெள்ளி இ.டி.எப்., திட்டங்களுக்கும் முதலீட்டாளர்களிடையே வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|