பதிவு செய்த நாள்
12 நவ2021
21:23

புதுடில்லி:‘கோ பேஷன்’ நிறுவனம், 17ம் தேதியன்று ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, ஒரு பங்கின் விலை 655 – 690 ரூபாய் என நிர்ணயித்து, அறிவித்து உள்ளது.
பெண்களுக்கான ஆடைகளை தயாரித்து வழங்கி வரும் கோ பேஷன் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,014 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 17ம் தேதி துவங்கி, 22ம் தேதியுடன் முடிவடைகிறது. துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு 16ம் தேதி துவங்குகிறது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 125 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு சொந்தமான 1.29 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, புதிதாக 120 பிரத்யேக விற்பனையகங்களை துவக்கவும்; நடைமுறை மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|