வெள்ளி இ.டி.எப்., திட்டம் விதிகளை திருத்தியது ‘செபி’ வெள்ளி இ.டி.எப்., திட்டம் விதிகளை திருத்தியது ‘செபி’ ... இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டை  தேர்வு செய்வது எப்படி? இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டை தேர்வு செய்வது எப்படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வெள்ளி இ.டி.எப்., விதிமுறைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2021
19:49

புதிதாக அறிமுகம் ஆக இருக்கும் வெள்ளி இ.டி.எப்., நிதிகளுக்கான நெறிமுறைகளை, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான ‘செபி’ வெளியிட்டுள்ளது.தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்றாக தங்க இ.டி.எப்., மியூச்சுவல் பண்ட் திட்டம் அமைகிறது.


இதே போலவே வெள்ளியை அடிப்படையாக கொண்டு வெள்ளி இ.டி.எப்., நிதிகளை அறிமுகம் செய்ய, செபி அண்மையில் அனுமதி வழங்கியது.இந்நிலையில், வெள்ளி இ.டி.எப்., நிதிகளுக்கான நெறிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது. தங்கம் போலவே, வெள்ளி இ.டி.எப்., நிதிக்கான வெள்ளி விலையும், லண்டன் சந்தையின் வெள்ளி விலையை அடிப்படையாக கொண்டு அமையும்; துாய வெள்ளியின் விலை கணக்கில் கொள்ளப்படும்.

வெள்ளியை கொண்டு வரும் போக்குவரத்து செலவு மற்றும் இறக்குமதி தீர்வு, பொருந்தக் கூடிய வரிகள் போன்ற செலவுகளும் விலையில் சேர்த்துக் கொள்ளப்படும்.வெள்ளி இ.டி.எப்., நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள், செபி அங்கீகரித்த நிறுவனங்களிடம் வெள்ளியை இருப்பு வைத்திருக்க வேண்டும். வெள்ளி இ.டி.எப்., பண்டகங்களில் முதலீடு செய்வதற்கான மற்றொரு வழியாக அமைவதாகவும், முதலீடு பரவலாக்கத்திற்கும் இது உதவும் என்றும் கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய பாலிசி பெற, மூன்று மாதம் காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக ... மேலும்
business news
மும்பை:கடந்த ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளில், சாதனை அளவாக 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ... மேலும்
business news
திருப்பூர்:கடந்த ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து 82 ஆயிரத்து, 653 கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)