பதிவு செய்த நாள்
16 நவ2021
20:33

புதுடில்லி:இந்தியா, கடந்த 7 ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை படைத்துள்ளது என்றும், இந்த போக்கு மேலும் தொடரும் என்றும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியா, கடந்த 7 ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை புரிந்துள்ளது. அரசு மேற்கொண்டு வரும் பெரிய கட்டமைப்பு மாற்றங்களை பார்க்கும்போது, இந்த போக்கானது, வரும் காலத்திலும் தொடரும் என கருதுகிறேன்.பொருளாதார நடவடிக்கைகளில் இந்த முன்னேற்றம் தொடரும். மேலும் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
இந்தியா தன் தரத்தை உலகத்துடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு உள்நாட்டு சந்தைக்காகவும், மற்றவை ஏற்றுமதி சந்தைக்காகவும் என்ற மனநிலையை நாடு கைவிட வேண்டும்.பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இங்கே வளரும். புதிய வணிகங்களை கையகப்படுத்தும்.
இந்தியாவில் வேலை வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச திறன்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடு 62 சதவீதம் அதிகரித்து, 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|