பதிவு செய்த நாள்
16 நவ2021
20:36

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 43 சதவீதம் அதிகரித்து, 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல், இறக்குமதியும் அக்டோபரில் 62.51 சதவீதம் அதிகரித்து, 4.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை பொறுத்தவரை பெட்ரோலியம், காபி, பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பருத்தி ஆடைகள், நுால், ரசாயனம், பிளாஸ்டிக், கடல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அக்டோபரில் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி 17.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 55.13 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டின் இதே காலகட்டத்தில், இறக்குமதியும் 78.16 சதவீதம் அதிகரித்து, 24.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபரில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது. மேலும், தங்கத்தின் இறக்குமதியும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி, அக்டோபரில் 44.24 சதவீதம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|