பதிவு செய்த நாள்
16 நவ2021
20:47

சென்னை:‘ஸ்டோரிடெல்’ எனும், ஆடியோ புத்தக செயலியில், அமரர் கல்கியின் ‘எஸ்.எஸ் மேனகா’ எனும் சிறுகதையை வாசிப்பதற்காக குரல் கொடுத்துள்ளார், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
இது குறித்து, கவுதம் மேனன் கூறும்போது, “கல்கி தன்னுடைய கதையை வெளிப்படுத்த, அவர் மொழியை கையாண்ட விதத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இதன் காரணமாகவே, இந்த பணியை நான் மிகவும் அனுபவித்து மேற்கொண்டேன்” என தெரிவித்துள்ளார். பலதரப்பட்ட பிரயாணிகளின் எண்ணங்கள் உரையாடல்களோடு, நம்மையும் சேர்த்து பயணிக்க வைப்பதாக இருக்கும் ஒரு காதல் கதை தான், எஸ்.எஸ். மேனகா.
ஸ்டோரிடெல் நிறுவனம், கடந்த 2017ல் இந்தியாவில் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ‘ஸ்டோரிடெல்’ மற்றும் ‘மோபிபோ’ எனும் பிராண்டுகளில் வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.ஸ்டோரிடெல் நிறுவனத்தின் ஆடியோ புத்தகங்களுக்கு, பல்வேறு தரப்பட்ட பிரபலங்கள் குரல் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த வகையில், தற்போது எஸ்.எஸ். மேனகா சிறுகதைக்கு, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|