பதிவு செய்த நாள்
17 நவ2021
18:58

‘ஹிண்டால்கோ’வுக்கு முதல் இடம்
‘ஆதித்ய பிர்லா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், ‘டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு 2021’ன் படி, உலகின் சிறந்த நிலைத்தன்மை கொண்ட அலுமினிய தயாரிப்பு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டும் உலகளவில் முதலிடத்தை பெற்ற இந்நிறுவனம், தொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்த ஆண்டும் முதலிடத்துக்கு தேர்வாகி உள்ளது.
யமஹா ஸ்போர்ட்ஸ் பைக்‘
யமஹா மோட்டார் இந்தியா’ நிறுவனம், ‘யமஹா ஒய்.இசட்.எப்., ஆர் 15 எஸ். வி.3.0’ என்ற புதிய வகை, சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கை, அறிமுகம் செய்துள்ளது.‘தி கால் ஆப் தி புளூ’ பிராண்டை விளம்பரப்படுத்தும் வகையில் அறிமுகமாகியிருக்கும் இதன் ‘எக்ஸ் ஷோரூம்’ விலை 1 லட்சத்து, 57 ஆயிரத்து, 600 ரூபாய்.
டிராக்டர் விலை அதிகரிப்பு
‘எஸ்கார்ட்’ நிறுவனம், அதன் டிராக்டர்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. வரும் 21ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கும் வகையில், நிறுவனத்தின் அனைத்து மாடல் வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட இருப்பதாகவும் எஸ்கார்ட் தெரிவித்துள்ளது.
‘ரெனோ க்விட்’ விற்பனை
‘ரெனோ க்விட்’ கார் விற்பனை, இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டியுள்ளது. ‘ரெனோ இந்தியா’ நிறுவனம், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘க்விட்’ காரின், 4 லட்சமாவது கார் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிறுவனம் எஸ்.யு.வி., கார்களையும் விற்பனை செய்து வருகிறது.
மூன்றாகப் பிரியும் ‘வேதாந்தா’
‘வேதாந்தா’ நிறுவனம், அதன் வணிகங்களை அலுமினியம், இரும்பு மற்றும் உருக்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து, பட்டியலிடப் போவதாக அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, வேதாந்தா நிறுவனமும் இந்த மூன்று வணிகங்களும் இணையாக செயல்படும் என்றும், அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|